சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாலை தரையில் கொட்டி, கறவை மாடுகளுடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இரூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். தங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் டி. திருநாவுக்கரசு, மாவட்டச் செயலர் பெ. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி, மாநிலச் செயலர் என். செல்லதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். 
  ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டருக்கு ரூ. 35, எருமைப்பாலுக்கு ரூ. 45 என விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். கால்நடைத் தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பாலில் சத்துக் குறைப்பு, அளவுக் குறைப்பு செய்வதைத் தடுத்திட வேண்டும். ஆவின் பால் கொள்முதல் அளவை நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகரிக்க வேண்டும். குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் சேர்த்து வழங்க வேண்டும். 
  பால் பவுடர், பால் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். பால் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை ரூ. 200 கோடியை ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். 
  தனியார் பால் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு குறையாமல் பால் கொள்முதல் செய்து அரசு அறிவித்த விலைக்கே விற் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  சங்க நிர்வாகிகள் சின்னசாமி, டி.எஸ். சக்திவேல், வி. பொன்னுசாமி, சி. வரதராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai