பருத்தி கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் மறியல்

வேப்பந்தட்டை அருகே பருத்தி கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 

வேப்பந்தட்டை அருகே பருத்தி கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும் இணைந்து செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடத்தி வருகின்றன. 
அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பசும்பலூர், கவர்பனை, அனுக்கூர், பிம்பலூர், வேப்பந்தட்டை உள்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 270 விவசாயிகள் 30 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏல முறை விற்பனைக்கு கொண்டுவந்தனர். 
இந்நிலையில், கடந்த வாரத்தை விட பருத்தி விலை குறைவாக ஏலம் கேட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குவிண்டாலுக்கு ரூ. 300 வரை விலை குறைந்ததாக பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் அலுவலர்களிடம் விவசாயிகள் முறையிட்டனராம். ஆனால், பருத்திக்கான கொள்முதல் விலையை உயர்த்தவில்லையாம். இதனால் 
அதிருப்தியடைந்த பருத்தி விவசாயிகள் விலை குறைவைக் கண்டித்து, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் அரும்பாவூர் போலீஸாரும், அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், பருத்தி ஏலம் விடும் நடைமுறை மிகவும் தாமதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com