பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் மீட்பு

பெரம்பலூர் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் குழந்தை தொழிலாளராக பணிபுரிந்த 13 வயது சிறுமியை

பெரம்பலூர் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் குழந்தை தொழிலாளராக பணிபுரிந்த 13 வயது சிறுமியை குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் அண்மையில் மீட்டனர். 
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஜே.ஏ. முகமது யூசுப் தலைமையில், குழந்தை பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் உளிட்ட பல்வேறு பகுதியில் இயங்கி வரும்  நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், பெரம்பலூர் மேட்டுத் தெருவில் உள்ள ரெடிமேட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பள்ளிப் படிப்பை நிறுத்திய 13 வயது சிறுமி பணியில் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த சிறுமியை மீட்டு குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பள்ளிப் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவியை பணியமர்த்திய நிறுவன உரிமையாளரின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பணிக்கு அமர்த்தியிருப்பது தெரிந்தால், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை 275722 மற்றும் 1098 எனும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com