பழமையான மரத்தை உயிர்ப்பிக்கும் பணி

குன்னம் அருகே சுமார் 75 ஆண்டுகள் பழமையான  ஆல மரத்தை உயிர்ப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. 

குன்னம் அருகே சுமார் 75 ஆண்டுகள் பழமையான  ஆல மரத்தை உயிர்ப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட பழமையான ஆல மரம் உள்ளது. இந்த ஆலமரம் தற்போது காய்ந்து, இலைகள் உதிர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த ஆலமரத்துக்கு உயிரூட்ட சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் முடிவு செய்தனர்.
அதன்படி, சென்னை ட்ரீ பேங்க் எனும் அமைப்பைச் சேர்ந்த முல்லை வனம், படடுப்போன ஆலமரத்துக்கு உயிரூட்டும் விதமான வேம்பு, வைக்கோல், தொற்றுநோய் தாக்காத வகையில் மூலிகைச் சாறு கொண்டு உயிரூட்டும் பணியில் ஈடுப்ட்டார். 
மேலும், பள்ளி மாணவ, மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்த முல்லை வனம், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். 
சூழலியாளர் ரமேசு கருப்பையா உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, சு. ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த சோழன் ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com