தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக பள்ளி மாணவர்கள் மெளன ஊர்வலம்
By DIN | Published On : 20th February 2019 08:55 AM | Last Updated : 20th February 2019 08:55 AM | அ+அ அ- |

காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மெளன ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலம், சிறுவாச்சூர் மதுரகாளிம்மன் கோயில் எதிரே தொடங்கியது. சிறுவாச்சூர் கிராமத்தின் முக்கிய வீசிகள் வழியாக சென்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கருப்பு கொடி, மெழுகுவர்த்தியுடன் சென்றனர்.
பின்னர், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பள்ளி வளாகத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைதி ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் ஆ. ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் முனைவர் கே. சிவகாமி முன்னிலை வகித்தார்.
இதில், பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரோதயம், ஹேமா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.