பிப். 22-இல் உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள்
By DIN | Published On : 20th February 2019 08:55 AM | Last Updated : 20th February 2019 08:55 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில், மண்டல அளவிலான உலகத் திறனாளர்களைக் கண்டறியும் போட்டி பிப். 22-ல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை இளம் வயதிலேயே கண்டறியும் வகையில், உலக திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 6, 7, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே உடற்திறன் போட்டிகள் நடத்தி, பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மாணவ, மாணவிகள் மண்டல போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதில் தேர்வாகும் 10 மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பல சர்வதேச வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு சாதனை படைத்து வருகின்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் மண்டல அளவில் நடைபெற உள்ளது. போட்டிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 8 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கெனவே நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான உலகத்திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு கல்வி மாவட்டத்துக்கு 70 மாணவ, மாணவிகள் வீதம் 8 கல்வி மாவட்டங்களுக்கு 560 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மண்டல அளவிலான உலகத்திறனாளர்களை கண்டறியும் திட்டப் போட்டிகள் பிப். 22 காலை 8 மணி முதல் பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ. 6,000 ஊக்கத் தொகை வீதம் 360 பேருக்கு ரூ. 21,60,000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு