பிப். 23, 24-இல் மாநில அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்
By DIN | Published On : 20th February 2019 08:56 AM | Last Updated : 20th February 2019 08:56 AM | அ+அ அ- |

ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் சார்பில், மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டி போட்டி பிப். 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பெரம்பலூரில் நடைபெறுகிறது.
பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிந்தடிக் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, பெரம்பலூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் சார்பில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டி போட்டி வரும் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 23 ஆம் தேதி காலை 7 மணியளவில் தொடங்கும் போட்டியை, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தொடங்கி வைக்கிறார். இதில், 200 மீ, 300 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ போட்டிகள், வயது வாரியாக 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.