Enable Javscript for better performance
பெயரளவில் நெகிழி ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    பெயரளவில் நெகிழி ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக புகார்

    By DIN  |   Published on : 08th January 2019 08:38 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூரில் நகராட்சி சார்பில் திங்கள்கிழமை பெயரவிற்கு நெகிழி ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக    வணிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    ஜன.1 ஆம்தேதி முதல் தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான  நெகிழிப் பொருள்களுக்குத் தடை அமலாகியிருக்கும் நிலையில், பொதுமக்களும், வணிகர்களும் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.
    இந்த நிலையில், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் பணியாளர்கள்  வணிக நிறுவனங்கள் சிலவற்றில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டு, நான் ஓவன் முறையில் தயாரிக்கப்பட்ட நெகிழிப் கைளை பறிமுதல் செய்தனர். அதே வேளையில், நகரிலுள்ள பெரிய ஜவுளி, வணிக நிறுவனங்கள், உணவகங்களில் ஆய்வு செய்தாலும், நான் ஓவன் பைகளை பறிமுதல் செய்யவில்லையாம்.
    இதனால் அதிருப்தியடைந்த மற்ற வணிகர்கள் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலை மேற்கொள்ள முயன்றனர்.இதையறிந்த நகராட்சி அலுவலர்கள் சிறிது நேரத்திலேயே சோதனை நடவடிக்கையை கைவிட்டு கிளம்பிச் சென்றனர்.  தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தை 30-க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட்டு விளக்கம் கேட்டனர். மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஆணையர்  சென்றிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அங்கு சென்ற வணிகர்கள், அவரிடம் முறையிட்டனர்.
    இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச் சங்க நிர்வாகிகள் கூறியது: நகராட்சி அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நான் ஓவன் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தவில்லை. அதனால், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் நான் ஓவன் பைகளை ஆர்டர் கொடுத்து, அச்சடித்து வைத்து பொங்கல் பண்டிகைக்கான வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திடீரென நான் ஓவன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனக்கூறும் நகராட்சி அலுவலர்கள், அந்தப் பைகளை பறிமுதல் செய்து அள்ளிச்செல்கின்றனர். இதனால்  பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    அதேசமயம், நான் ஓவன் பைகளை பயன்படுத்தும் பெரிய நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நகராட்சி அலுவலர்களின் பாரபட்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது  என்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp