சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.
  இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் இந்த முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலியாக உள்ள ஆசிரியர், கண்காணிப்பாளர், நெட்வொர்க் டெக்னீசியன், இன்சூரன்ஸ் மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
  இதில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2,  ஐ.டி.ஐ,  டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.எட் முடித்த ஆண், பெண்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai