தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்: ஜன. 13-இல் நடைபெறுகிறது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஜன. 13 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30-க்குள் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கி, நாள்தோறும் காலை 10 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு, இரவு மூலவருக்கு அபிஷேக அலங்காரம், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
19 ஆம் தேதி மூலவருக்கு அபிஷேக வழிபாடு, 7 மணிக்கு திருக்கல்யாணம், இரவு சுவாமி திருவீதி உலா, 20 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெள்ளி மயில், குதிரை வாகனம், புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.30 முதல் 12 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 3.30-க்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தடைதல், 23 ஆம் தேதி கொடியிறக்கும் நிகழ்ச்சி, 24 ஆம் தேதி மஞ்சள் நீர் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. 
தேரோட்டத்தை முன்னிட்டு, ஜன. 21, 22-களில் பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ம. யுவராஜு, தக்கார் கே. பாரதிராஜா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com