சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  இக்கல்லூரியின் 14 துறைகளைச் சேர்ந்த மாணவிகள், பேராசிரியைகள் சார்பில் நடத்தப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில்,  சர்க்கரைப் பொங்கல், வெண், ரவா, கற்கண்டு, மிளகுப் பொங்கல் உள்ளிட்ட 12 வகையான பொங்கல் தயார் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. 
  தொடர்ந்து, அனைத்துத் துறை மாணவிகள் சார்பில், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட 
  கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   
  சிறப்பான முறையில் பொங்கல் செய்த துறைக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.   
  நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், கல்லூரி முதல்வர் செந்தில்நாதன், துணை முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ், காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மாலதி  மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai