சுடச்சுட

  

  தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு,   மாவட்ட செயலர் துரை. காமராஜ் தலைமை வகித்தார்.
   மாநில இளைஞரணிச் செயலர் நல்லதம்பி, மாநில மகளிரணிச் செயலர் மாலதி, மாநில வழக்குரைஞர் அணிச் செயலர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணிச் செயலர் கோதை. மாரியப்பன்  உள்ளிட்ட அணி நிர்வாகிகள் பங்கேற்று, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகரச்  செயலர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலர்கள் தவசி, அன்பழகன், சிவா  மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai