சுடச்சுட

  

  பெரம்பலூரில்  நடைபெற்ற பாவைப் போட்டிகளில் 125 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில்,  பெரம்பலூர் மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயில் மார்கழி இசைத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்குஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 
  ஒப்பித்தல்  மற்றும் கட்டுரைப் போட்டிகள்  1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மூன்றுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன.
  பெரம்பலூர், சிறுவாச்சூர், குரும்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தொடக்க  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 125 பேர்  பங்கேற்று தங்களது இலக்கியத் திறனை வெளிப்படுத்தினர். 
  தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கேடங்கள் மற்றும் சான்றிதழ்களை  அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா வழங்கினார்.  பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் மணி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா, செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர், தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அலுவலர் யுவராஜ், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீசுவரர்  கோயில் நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்வில்  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai