சுடச்சுட

  

  பெரம்பலூரில் புத்தகத் திருவிழாவை நடத்த வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 12th January 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை நிகழாண்டிலும் விரைந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கரம் கொடு மனிதா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், அமைப்பின் நிறுவனர் பிரபாத் கலாம் தலைமையில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
  பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, ஊர்ப்புற நூலகங்கங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான தரமான நூல்களை வாங்கிப் பயனடைந்தனர். இந்நிலையில், நிகழாண்டு ஜனவரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 8-ஆவது புத்தகத் திருவிழா இதுவரை நடைபெறுவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தக வாசிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அறிவுத் தாகம் உள்ள அனைவரும் கவலையடைந்துள்ளனர். கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா ஒரு வரப்பிரசாதம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய தரமான புத்தகங்களையும், பாடத்திட்டம் தொடர்பான மிகச் சிறந்த நூல்களையும் அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் வாங்கி இளைஞர்கள் பயனடைய முடிந்தது. 
  எனவே புத்தகத் திருவிழாவை வழக்கம்போல் தொடர்ந்து நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai