சுடச்சுட

  

  தேவாலயங்களை பழுதுபார்க்க, சீரமைக்க விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 13th January 2019 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். 
  தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணி மேற்கொள்ள நிகழாண்டுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
  இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எந்த நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. 
  சான்றிதழ் (பிற்சேர்க்கை- 3) அளிக்க வேண்டும். சீரமைப்புப் பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு, மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும். பழமையான தேவாலயங்கள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ரூ. 1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுகள், அதற்கு மேற்பட்ட பழமையான தேவாலயங்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்கப்படுகிறது.
  விண்ணப்பத்தை பிற்சேர்க்கை-1, 3 உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பம் மற்றும் சான்றிதழை பதிவிறக்கிகொள்ளலாம். 
  மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, அனைத்து ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஆய்வு மேற்கொண்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு அனுப்பப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai