சுடச்சுட

  


  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட 4 கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கொட்டரை, கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் என். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். 
  கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், தங்களது கிராமங்களில் உள்ள குடிநீர், சாலை வசதிகள், தெரு விளக்குகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ஏரிகள், வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரப்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன், மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்கள், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். 
  மாவட்ட அணி அமைப்பாளர்கள் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க. முத்துக்கண்ணு, கே.எம்.ஏ. சுந்தர்ராஜ், வெ. ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி. காட்டுராசா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ந. ராகவன் நன்றி கூறினார். 
  இதேபோல, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள பில்லாங்குளம், கை.களத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலர் எஸ். நல்லதம்பி தலைமை வகித்தார். 
  கூட்டத்தில் பங்கேற்ற மாநில தேர்தல் பணிக் குழு செயலர் வேளச்சேரி பி. மணிமாறன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தார். 
  பெரம்பலூர் நகரச் செயலர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ. அன்பழகன், பேரூர் செயலர் பி. சேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் எம். ரெங்கராஜ், ஆர். ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai