கேரள அரசை கண்டித்தும், ஆதரித்தும் ஆர்ப்பாட்டங்கள்

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை க


சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் தலைமை வகித்தார். திருச்சி கோட்டச் செயலர் குணசேகர், கோரிக்கைகளை விளக்கினார். 
ஆர்ப்பாட்டத்தில் சபரிமலை ஐயப்பனின் புனிதத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் கேரள முதல்வரைக் கண்டித்தும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வலியுறுத்தியும், அம்மாநில அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கருப்பையா, செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரச் செயலர் கஜேந்திரன் வரவேற்றார். கிளை பொதுச்செயலர் ஆனந்த் நன்றி கூறினார்.
பெரம்பலூர், ஜன. 12: கேரள அரசைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் பெரம்பலூர் வட்டச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லதுரை, ஏ. கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீரப்பை நிலைநாட்டவும், பெண்களின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதியோடு செயல்படும் கேரள முதல்வரின் செயலை சீர்குலைப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படடன.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். முருகேசன், எ. கணேசன், மு.பா. அண்ணாதுரை, வட்டக்குழு உறுப்பினர்கள் பி. கிருஷ்ணசாமி, பி. முத்துசாமி, எம். கருணாநிதி, சி. சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com