தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, பள்ளிகளில் சமத்துவப் பொங்கல்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது


பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இருபாலர் கலை மற்றும் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் பங்கேற்றார். 
இதில், பல்வேறு துறை வாரியாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், ரவா உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் வைக்கப்பட்டு, இறைவனுக்கு பூஜை செய்யப்பட்டு. மாட்டுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய நடனமான கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கல்லூரி முதல்வர்கள் வெற்றிவேல், சாந்தலட்சுமி, பாஸ்கர், துணை முதல்வர் ஜி. ரவி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பள்ளிகள்: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நடைபெற்ற விழாவையொட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 
முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மு. அட்சயகோபால், மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரேமலதா மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஆர். கோவிந்தசாமி வரவேற்றார். ஆங்கில வழிக்கல்வி முதல்வர் வி.எஸ். மாலா நன்றி கூறினார். 
இதேபோல, பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல் மைட்டி வித்யாலயா சிபிஎஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொஙகல் விழாவுக்கு, பள்ளி தாளாளர் முனைவர் ஆ. ராம்குமார் தலைமை வகித்தார். விழாவையொட்டி, மாணவர்களின் பெற்றோர் பொங்கல் வைத்து, பூஜை செய்தனர். தொடர்ந்து, பெண்களுக்கான கோலப்போட்டியும், மாணவ, மாணவிகளின் கலாசார கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் சந்திரோதயம், ஹேமா, ஜாய் சகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சிவகாமி வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com