விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற


பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில், கல்லூரி மாணவிகளுக்கு காய், கனிகளில் ஓவியம் செதுக்குதல், முகத்தில் வர்ணம் பூசுதல், கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 
சமத்துவ பொங்கல் விழா:
மகளிர் கல்லூரி வளாகம் மற்றும் ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் சார்பில் பல்வேறு வகையான பொங்கல் வைத்து, இறைவனுக்கு பூஜை செய்து மாடுகளுக்கு ஊட்டப்பட்டது. பின்னர், மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் பேசியது: 
அன்போடு இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் நன்றி பாராட்டும் நன்னாள். சமுதாயப் பண்பாட்டை காத்து இயற்கையோடு இணைந்து இறைவனை வழிபடும் திருநாள் பொங்கல் விழா. இந்நாளில் பழைய தீய எண்ணங்கள், செயல்கள், மனகசப்புகளை அறவே ஒழிக்க வேண்டும். சாதிப்பதற்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை விருப்பத்தோடு ஏற்று, தங்களது லட்சியத்தை அடைய வேண்டும் என்றார் அவர்.
விழாவையொட்டி, கல்லூரி மாணவிகளின் பாரம்பரிய நடனமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி முதல்வர் எம். சுபலட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி முதல்வர் பால்வண்ணன், ஸ்ரீராமகிருஷ்ணா தொழிநுட்பக் கல்லூரி முதல்வர் ராஜசேகர், ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் பத்மலால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் பி. கோகிலா, வி. கற்பகம், எம். ராமேஸ்வரி, பி. கனகாம்பாள், ஏ. சூரியா ஆகியோர் செய்தனர். 
இளங்கலை வேதியியல் இரண்டாமாண்டு மாணவி ஏ. அருள்மெழி வரவேற்றார். தமிழ் இளங்கலை இலக்கியம் இரண்டாமாண்டு மாணவி ஆர். ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com