தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகளில்  சிறப்பிடம் பெற்றோருக்குப் பாராட்டு

தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்

தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.     
பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளங்கலை மூன்றாமாண்டு வணிக மேலாண்மை துறை மாணவி ஜா. பீபி பாத்திமா, அகில இந்திய அளவில் ரயில்வே துறையின் மூலம் நடத்தப்பட்ட 100 மீட்டர் தடகளப் போட்டியிலும், மாநில அளவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும்  90-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு இடையே பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 2 ஆம் பரிசும் பெற்றார். 
இளம் அறிவியல் இரண்டாமாண்டு கணினி பயன்பாட்டியல் துறையில் பயிலும் மாணவன் அ. அரவிந்தன், தில்லியில் சர்வதேச அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கமும், தேசிய அளவில்  புணே போட்டியில் வெள்ளியும், ஒசூர் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.
இதுபோல, இளம் அறிவியல் முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த செ. முத்துகலைஞன், தேசிய அளவில் கர்நாடகாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சண்டைப் பிரிவில் 3-வது பரிசும், மாநில அளவில் அரியலூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில்  சண்டைப் பிரிவில்  முதலிடமும், கட்டாப் பிரிவில் 2-வது இடமும் பெற்றார், . வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பரிசுகளை வழங்கினார்.  கல்வி நிறுவனங்களின் செயலர்  பி. நீலராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன், துணை முதல்வர் பேரா. கோ. ரவி  உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.                         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com