பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 218 மனுக்கள்
By DIN | Published On : 29th January 2019 04:36 AM | Last Updated : 29th January 2019 04:36 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி தலைமை வகித்து,முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயத்தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள்அளித்த 218 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் மனோகரன், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.