தேசிய கல்விக் கொள்கை வரைவு விளக்கக் கூட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவு விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவு விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் எட்வின், செல்லபாண்டியன், தேவன்பு, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கவிஞர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை வரைவு அட்டவணை 8 -இல் இடம்பெற்றுள்ள 22 தேசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட வேண்டும். 
இந்தியா முழுவதும் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு கல்வியை தீர்மானிக்கப் போகும் புதிய கல்விக் கொள்கையை வாசித்து, விவாதிக்க 6 மாத கால அவகாசம் வழங்கிட வேண்டும். சனாதன வாழ்வியலை வலியுறுத்தும் இந்த புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, இதர சமூக இயங்கங்களை ஒருங்கிணைத்து பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் ப. செல்வகுமார், பொருளாளர் பிரபாகரன், பேராசிரியர் குமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com