முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில், ஆதரவற்றோர் இல்லங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு

பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில், ஆதரவற்றோர் இல்லங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை ஓராண்டு முழுவதும் விடுமுறையின்றி அனைத்து நாள்களுக்கும் மதிய உணவு அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.  
நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் பொறியாளர் சிவராஜ் தலைமை வகித்தார். செயலர் ராஜா, பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவர் ஏ.ஆர்.வி கணேசன், காப்பகங்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். 
இத்திட்டத்தின் மூலம், துறைமங்கலம் தீரன் நகர் அருகேயுள்ள மனநலன் குன்றிய முதியோர் காப்பகம், ரோவர் சாலையில் அமைந்துள்ள முதியோர் காப்பகம், காது கேளாதோர் மற்றும் வாய்ப்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள 190 பேருக்கு ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கப்படும் என அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com