மருத்துவமனையில்நகை பறித்த பெண் கைது
By DIN | Published On : 08th July 2019 07:55 AM | Last Updated : 08th July 2019 07:55 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் உறவினரிடம் நகை பறித்த பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தைச் சேர்ந்த ராசு மனைவி பெரியம்மா (37). இவர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஒரு பெண் தப்பியோட முயன்றார். இதையறிந்த, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி மாரியாயி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த பெரம்பலூர் போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.