எச்.ஐ.வி பாதித்த சிறுவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு: பெரம்பலூர் ஆட்சியரிடம் புகார்

பெரம்பலூர் அருகே எச்.ஐ.வி பாதித்த சிறுவனைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்தது தொடர்பாக

பெரம்பலூர் அருகே எச்.ஐ.வி பாதித்த சிறுவனைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்தது தொடர்பாக, சிறுவனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அந்தச் சிறுவனின் தாய் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சிறுவனுக்கும் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். உடல் நலன் பாதிப்பு காரணமாக அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. 
கொளக்காநத்தம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்து வந்த சிறுவன், 9 ஆம் வகுப்பு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் சிறுவனை நிகழாண்டு கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க அவரது உறவினர்கள் முயற்சித்துள்ளனர். எச்.ஐ.வி பாதிப்பு உள்ளதால் மாணவரை 10 ஆம் வகுப்பில் சேர்க்க அப்பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுவனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கொளக்காநத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தக்கோரியும், பள்ளியில் சேர்க்க வேண்டுமென புகார் மனு அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com