உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள்தொகை

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
பாலக்கரையில் தொடங்கிய பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, கிறிஸ்டோபர் செவிலியர் கல்லூரி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழஇப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர். 
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு  கருத்தரங்கில், மாவட்ட அளவிளான பேச்சுப்போட்டி மற்றும் கட்டரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மருத்துவ துணை இயக்குநர் சிவப்பிரகாசம், பொது சுகாதாரத்துறை திட்ட மேலாளர் கலைமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com