சுடச்சுட

  


  மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவாஜி, மாவட்ட துணைத் தலைவர்கள் பன்னீர்செல்வம், அருணாசலம், மாவட்ட பொதுச்செயலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  ஆர்ப்பாட்டத்தில், கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மூலம், ஆட்சியைக் கலைக்க முயலும் மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டைக் கண்டித்தும், இச்செயலை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலர் துரை. ராஜீவ்காந்தி, ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்பிரசாத், வட்டார தலைவர்கள் காமராஜ், சித்தர், ரமேஷ், பழனிசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முஹம்மது மீரான், வழக்குரைஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் அரியலூர் எஸ்.எம்.சந்திரசேகர், ஜயங்கொண்டம் ஜாக்சன், மாநில பொதுக் குழு உறுப்பினர் மா.மு.சிவக்குமார் மற்றும் வட்டாரத் தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு , பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai