சுடச்சுட

  

  பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில், ஆங்கில துறை சார்பில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  விழாவுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார். திருச்சி நிவேதிதா அகாதெமி நிர்வாக இயக்குநர் சேதுராம் குத்து விளக்கேற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில், 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
  முன்னதாக, கல்லூரி முதல்வர் எம். சுபலெட்சுமி வரவேற்றார். ஆங்கில துறைத் தலைவர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai