சம்பங்கியில் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கியில் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கியில் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர்  ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வி.இ. நேதாஜி மாரியப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக சம்பங்கி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
தற்போது நிலவும் தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் வறட்சி காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சியான இலைப்பேன், செஞ்சிலந்திப்பேன், மாவுப்பூச்சிகள் தாக்குதல் தென்பட்டு வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த புரப்பார்கைட் 57 இ.சி என்னும் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டருக்கு 1 மில்லி வீதம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இதைக் கட்டுப்படுத்த பைப்புரோனில் 5 சதவிகித  எஸ்.சி என்னும் மருந்தை லிட்டருக்கு 1.5 மில்லி என்ற அளவு கலந்து தெளிக்கலாம்.
மாவுப்பூச்சிகளில் வாய் மாவுப்பூச்சியான பெரிசியா விர்கேடா என்னும் மாவுப்பூச்சி செடியின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சும். இதைக் கட்டுப்படுத்த புரபனோபாஸ் பூச்சிக் கொல்லி மருந்தை லிட்டருக்கு 2 மில்லி கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com