தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 


பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணை குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி. லிங்கேஷ்வரன் தலைமையில், அமர்வு நீதிபதி எஸ். மலர்விழி, தலைமை நீதித்துறை நடுவர் எஸ். கிரி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ப. கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் டி.செந்தில்ராஜன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன் ஆகியோர் கொண்ட அமர்வானது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாரா கடன் வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது. 
இதில், 196 வங்கி வழக்குகளுக்கு ரூ. 1,66,89,672, 73 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 3,81,99,600 தீர்வு காணப்பட்டது. மேலும், 43 சிவில் வழக்குகளுக்கு ரூ. 2,84,34,356, 266 சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ. 1,64,650, 2 குடும்ப நல வழக்கு, 1 நிலம் கையப்படுத்தும் வழக்குகளுக்கு ரூ. 76,126, 2 காசோலை மோசடி வழக்குகளுக்கு ரூ. 2,57,500 என, மொத்தம் 579 வழக்குகளுக்கு ரூ. 8,30,19,732 தீர்வு காணப்பட்டது.  
இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் டி. தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com