வேளாண் பிரச்னைகளைத் தீர்க்க மாணவர்கள் முயல வேண்டும்

தற்போதைய சூழலில் நிலவும் வேளாண் பிரச்னைகளைத் தீர்க்க மாணவர்கள் முயல வேண்டும் என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். 


தற்போதைய சூழலில் நிலவும் வேளாண் பிரச்னைகளைத் தீர்க்க மாணவர்கள் முயல வேண்டும் என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். 
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியில், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட முதலாமாண்டு விடுதி நாள் விழாவுக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:
வேளாண் கல்வியை ஏட்டளவில் மட்டுமே தெரிந்துகொள்ளாமல், செய்முறையாக அறிந்துகொள்ள வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் வேளாண் பிரச்னைகளை தீர்க்கும் விஞ்ஞானிகளாக மாணவர்கள் மாற வேண்டும். 
நவீன யுக்திகளைக் கடைப்பிடித்து, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெ. பாண்டியராஜன், தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கஜேந்திரன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சு. துரைராஜ் ஆகியோர் வேளாண் கல்லூரியின் சிறப்பு, வேளாண் பட்டப் படிப்பு, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான யுக்திகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.  
தொடர்ந்து, விடுதி அறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. விழாவையொட்டி, விடுதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் விடுதி காப்பாளர் வி.அ. மோகன்லால் வரவேற்றார். பெண்கள் விடுதி காப்பாளர் செ. செந்தமிழ்செல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com