Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட சிறப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்துத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் குறித்த சிறப்புபயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் வட்டார வளமைய அலுவலகம் மற்றும் பெரம்பலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    வட்டார கல்வி அலுவலர் செந்தாமரைச்செல்வி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமீனாள் பயிற்சிகளைத் தொடக்கி வைத்தார்.
    இதில், புதிய பாடத்திட்டம் குறித்த நிறை, குறைகள் மற்றும் அதிலுள்ள பிழைகளை திருத்தம் செய்தல் குறித்த கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி வகுப்புகளை நடத்தினர். 2, 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் குறித்த முதல்கட்டப் பயிற்சி வகுப்பில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 பேர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai