Enable Javscript for better performance
கந்து வட்டி வழக்கில் பால் கூட்டுறவு சங்கச் செயலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கந்து வட்டி வழக்கில் பால் கூட்டுறவு சங்கச் செயலர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூரில் கந்து வட்டி வசூலித்த வழக்கில், பால் கூட்டுறவுச் சங்க செயலரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கச் செயலராக இருப்பவர் பாண்டியன் (48). அதிமுக பிரமுகரான இவரிடம், பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாராம்.
     வாங்கிய தொகைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக வட்டி செலுத்தியும், பாண்டியன் மேலும் அதிக வட்டி கேட்டு மணிகண்டனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து பாண்டியனைக் கைது செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் அசோக் பிரசாத் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai