Enable Javscript for better performance
சுவரில் மோதிக்கொண்ட விசாரணை கைதி காயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர் சுவற்றில் மோதிக்கொண்டு பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
    சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சித்திக் (36). பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர், பெரம்பலூரில் நடைபெற்ற திருட்டு வழக்கில் பெரம்பலூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த முகமது சித்திக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 
    இதையடுத்து தலைமறைவாக இருந்த முகமது சித்திக்கை கைது செய்த பெரம்பலூர் போலீஸார், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி. லிங்கேஸ்வரன் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை ஜூலை 26 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையறிந்த முகமது சித்திக் நீதிமன்றத்தில் உள்ள சுவறில் மோதிக்கொண்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai