Enable Javscript for better performance
ஜூலை 29-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 29-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜூலை 29 காலை 10.15 -க்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  
    இக்கூட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவணச் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai