Enable Javscript for better performance
தீக்குளித்து  சிகிச்சை  பெற்ற தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்து தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
    பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகேசன் (45), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி சாந்தி, குழந்தைகள் சசிக்குமார், சரத்குமார், முத்துலெட்சுமி ஆகியோர் உள்ளனர். முருகேசனுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 
    இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முருகேசன்  மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித்  தீவைத்துக்கொண்டார். 
    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai