Enable Javscript for better performance
தூய்மை இந்தியா திட்ட  விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் பேசியது: 
    மத்திய அரசால் கடந்த 2.10.2012 -இல் காந்தியடிகளின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் இதுவரை 9.76  லட்சம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நோயில்லாத நாடுதான் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியும். நோயில்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.  முன்னதாக நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணியில், ஓலைக் கலைக் குழுவினர் சார்பில் மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
    தூய்மை பாரத மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, பள்ளித் தலைமை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நாகரத்தினம், கள விளம்பர உதவி அலுவலர் ரவீந்திரன், தேசிய சுகாதார திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி, அரசு வட்டார மருத்துவ அலுவலர் மகாலக்ஷ்மி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, லெட்சுமி, ஆலத்தூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai