Enable Javscript for better performance
மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக பாபு புதன்கிழமை பொறுப்பேற்றார்.
    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலராக பணியாற்றி வந்த ம. ராமசுப்ரமணியராஜா, தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலராகவும், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராகவும் அண்மையில் பணி மாறுதல் செய்யப்பட்டனர். 
    அதன்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்ற பாபுவிடம், முன்னாள் விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியராஜா பொறுப்புகளை ஒப்படைத்தார்.
    இதேபோல, வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராகப் பணிபுரிந்த ஜெயக்குமாரி பெரம்பலூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளராக பொறுப்பேற்றார்.
    புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai