Enable Javscript for better performance
5 பள்ளிகளில் சட்டக் கல்வியறிவு சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் சட்டக் கல்வியறிவு சங்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. 
    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக 10 சட்ட கல்வியறிவு சங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எசனை, வேப்பந்தட்டை, வெங்கலம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் சட்ட கல்வியறிவு சங்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. 
    இந்த சங்கங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான டி லிங்கேஸ்வரன் தொடக்கி வைத்தார். 
    நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வினோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக் குழுச் அலுவலர் வெள்ளைச்சாமி செய்தார். இதேபோல, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைக்குடிகாடு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியிலும் சட்ட கல்வியறிவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai