தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி : நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க வலியுறுத்தல்

தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார் நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள்


தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார் நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.ஆர். நந்தகுமார்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: 
தமிழகத்தில் இயங்கும் 20 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக 40 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
1.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றும் இப் பள்ளிகளில், 1.50 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். இப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும், சலுகைகளும் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் சொத்து வரி, தொழில் வரி கேட்பதை கைவிட வேண்டும். 
அந்தந்த மாவட்ட எல்லையில் இருக்கக்கூடிய பள்ளி வாகனங்களுக்கு சுங்க வரியை ரத்துசெய்ய வேண்டும். நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். 
சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற  உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும். ஜிபிஆர்எஸ் கருவி பொறுத்துவதால் பள்ளி நிர்வாகிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அதற்கான அறிவியல் பூர்வமான வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும். இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு புதிய பள்ளிக்கும் புதிதாக அங்கீகாரம் வழங்கக் கூடாது.
 மும்மொழி கல்விக் கொள்கையையும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வரவேற்கிறோம் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலர் டாக்டர் ஜி.ஆர் ஸ்ரீதர், மாவட்டத்  தலைவர்கள் மாணிக்கம், குணசேகரன், பெரியசாமி, வழக்குரைஞர் டி.ஜி பழனிவேலு, சந்திரசேகர், ராஜேந்திரன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com