Enable Javscript for better performance
பெரம்பலூர்: சூறாவளிக் காற்றில் சாய்ந்த பாக்கு மரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர்: சூறாவளிக் காற்றில் சாய்ந்த பாக்கு மரங்கள்

    By DIN  |   Published on : 01st June 2019 09:38 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பரவலாக பெய்த மழையின் போது, 1,000-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்து நாசமடைந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    தமிழகத்தில் கடந்த 1 மாத காலமாக அக்னி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழை கோடை வெப்பத்தை தணிக்க உதவியது என்றாலும், விவசாயிகளுக்கு பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
    பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர், வேப்பந்தட்டை, மலையாளப்பட்டி, வாலிகண்டபுரம், வெண்பாவூர், பாலையூர் மற்றும் அரும்பாவூர் ஆகிய பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. அப்போது வீசிய பயங்கர சூறாவளிக் காற்றில் வேப்பந்தட்டை அருகேயுள்ள மலையாளப்பட்டி கிராமத்தில் விவசாயி சரவணனுக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாக்கு தோப்பில் 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டிருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. சித்திரவள்ளி என்பவரின் ஆட்டுக்கொட்டகை சரிந்து விழுந்ததில் ஒரு ஆடு பலியானது. 
    பெரம்பலூரில் மழை பாதிப்பு: பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு இடங்களில் தகரக் கொட்டகைகள், விளம்பர பதாகைகள் விழுந்து சேதமடைந்தன. 
    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    பலத்த மழையில் இந்தச் சாலை வழியே இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்ற 7 பேர் சாலையில் சறுக்கி விழுந்து பலத்த காயமடைந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
    பெரம்பலூர் நகரில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பரவலான மழையால் சாலையோரங்களிலும், மழைநீர் கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
    கோடை வெயிலின் தாக்கத்தால் அவதியுற்று வந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் தொடர்ந்து குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

    வாழை சேதம்
    வேப்பந்தட்டை அருகேயுள்ள பாலையூர் கிராமத்தில் விவசாயி அறிவழகன் சாகுபடி செய்திருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான 350-க்கும் மேற்பட்ட  வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. 
    வெண்பாவூரிலும் விவசாயிகள் சிலரது வாழை மரங்கள் முறிந்து நாசமானது. சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மற்றும் பாக்கு மரங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மின்இணைப்பு துண்டிப்பு: சூறாவளிக் காற்றின்போது, பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp