பெண் காவலர் தற்கொலை முயற்சி

பெரம்பலூரில் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது புதன்கிழமை தெரியவந்தது. 

பெரம்பலூரில் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது புதன்கிழமை தெரியவந்தது. 
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் உமல் ஷர்மிளா (28). இவருக்குத் திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவரைப் பிரிந்து பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசித்து வருகிறார்.  
இந்நிலையில், தனது குடும்ப நலன் கருதியும், குழந்தையைப் பராமரிக்க வசதியாகவும், வெளியில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்புவதற்குப் பதிலாக மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பதிவேடுகளை பராமரிக்கும் பணிக்கு இடமாற்றம் செய்து தருமாறு ஆய்வாளரிடம் வலியுறுத்தி வந்தாராம். 
இதனிடையே, கடந்த 8 ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து ஷர்மிளா தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதியினர் ஷர்மிளாவை மீட்டு, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  உயரதிகாரிகள் கொடுத்த பணி அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா, அல்லது அவரது குடும்பச் சூழ்நிலை காரணமாக விஷம் குடித்தாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com