ஹைட்ரோகார்பன் திட்ட ரத்து கோரி நூதன முறையில் மனு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினர் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர். 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினர் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் மூச்சுக்காற்றை பலூனில் நிரப்பி நூதன முறையில் அளித்த மனுவில் தெரிவித்தது: 
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், சுவாசிக்கும் காற்றுக்கே ஆபத்து வந்துவிடும். வெப்பம் அதிகரித்து இயற்கைச் சூழல் பாழடைந்து, மழை மேகங்கள் வறண்டு மழைப் பொழிவு இல்லாமல் போகும். 
மேலும், இத் திட்டத்தால் கடல் நீர் மாசடையும், மனித மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும், மழை நீர் ஆதாரத்திற்கும், 80 சதவீத ஆக்சிஜன் கிடைக்கச் செய்யும் கடலுக்குள் நிறைவேற்றப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பேராபத்து 
வந்துவிடும். எனவே, இத் திட்டத்தை கைவிட மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com