இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் கொலையைக் கண்டித்து, பெரம்பலூரில் அச் சங்கத்தினர் கண்டன

பெரம்பலூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் கொலையைக் கண்டித்து, பெரம்பலூரில் அச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் யு. பாலகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எல்.கே. அன்பரசன், மாவட்டப் பொருளாளர் எஸ்.கே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவர் என். செல்லதுரை, மாவட்டச் செயலர் எம். கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
ஆர்ப்பாட்டத்தில், செல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். கரையிருப்புப் பகுதியை வன்கொடுமை பகுதியாக உடனடியாக அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ. கலையரசி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ். அகஸ்டின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com