அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை மேல்நிலைப்பள்ளி மற்றும்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பிரான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியைத் தொடக்கி வைத்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ந. ஹரிதேவி. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரக்கன்றுகள் நட்டு வைக்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். பள்ளி வளாகத்தில தொடங்கிய பேரணியானது, கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே சென்று, மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. 
தொடர்ந்து, சுற்றுச்சூழல் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  உதவி தலைமை ஆசிரியர் த. கருணாநிதி உள்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
தம்பிரான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்: இப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடந்த 13 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை கொண்டாடப்பட்டது. இதில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி வளாகத்தில் வேம்பு, பூவரசு உள்ளிட்ட பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 
பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், உதவி தலைமை ஆசிரியர் வ. மகேஸ்வரி, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கு. அம்சா உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com