பெரம்பலூரில் இ- சேவை மைய மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 23rd June 2019 04:21 AM | Last Updated : 23rd June 2019 04:21 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் இ- சேவை மைய பொறுப்பாளர்களுக்கான பொருளாதார கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை சார்பில் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதற்காக, பிரத்யேக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்காக பெரம்பலூர் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள பொது சேவை மையத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்கு, பெரம்பலூர் மாவட்ட புள்ளியல் துறை துணை இயக்குநர் தனபால் தலைமை வகித்தார். மாவட்ட புள்ளியல்துறை உதவி இயக்குநர் ஆறுமுகம், தேசிய புள்ளியல்துறை அலுவலர்கள் திருச்சி சிவகுமார், கோவை அபிலேஷ், பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவர ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர், கணக்கெடுக்கும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது இ- சேவை மைய பொறுப்பாளர்கள் கனகராஜ், தனசேகர், ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொது சேவை மைய மாவட்ட மேலாளர்கள் ரகுநாதன், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக, பொது சேவை மைய மேற்பார்வையாளர் ராஜன் வரவேற்றார். வேப்பந்தட்டை மணிகண்டன் நன்றி கூறினார்.