பெரம்பலூரில் முழு நிலவு கூட்டம்
By DIN | Published On : 23rd June 2019 04:22 AM | Last Updated : 23rd June 2019 04:22 AM | அ+அ அ- |

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் முழு நிலவுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை மாவட்ட தலைவர் கவிச்சிட்டு வேல். இளங்கோ தலைமை வகித்தார். கவிஞர்கள் விளவை செம்பியன், சிங்காரவேலன், மு. பக்கிரிசாமி, க. பெரியசாமி, வழக்குரைஞர் கி. கோவிந்தன், ஆசிரியர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவிஞர் தமிழோவியன் முன்னாள் முதல்வர் கலைஞர் எனும் தலைப்பிலும், தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் இலக்கியத்தில் கலைஞர் எனும் தலைப்பிலும் பேசினர். இதில், தலைமை ஆசிரியர் மலர்கொடி, முனைவர் காப்பியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இலக்கியப் பேரவை செயலர் கி. முகுந்தன் வரவேற்றார். துணைச் செயலர் கவிஞர் ந. சிற்றரசு நன்றி கூறினர்.