மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் காலி பணியிடங்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டுமென மின் ஊழியர் மத்திய அமைப்பு


மின் வாரியத்தில் காலி பணியிடங்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டுமென மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டக் கிளையின் 11-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். 
வட்ட இணைச் செயலர் ராஜகுமாரன் கொடியேற்றிவைத்தார். சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். வட்டச் செயலர் எஸ். அகஸ்டின் ஆண்டறிக்கையும், வட்டப் பொருளாளர் தமிழ்செல்வன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.  
இதில், மின் துறையை பொதுத் துறையாகப் பாதுகாத்திட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 
மின் வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டும், ஐ.டி.ஐ படித்தவர்களை கொண்டும் நிரப்பிட வேண்டும். பெரம்பலூர் கோட்டத்தை பெரம்பலூர், பெரம்பலூர் கிராமியம் என இரு கோட்டங்களாகப் பிரித்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும். 
ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை தொடங்கிட வேண்டும். 
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மின் வாரியம் உடனடியாகத் தொடங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நீர் நிலைகளை பாதுக்காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலர் காங்கேயன், மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், திருச்சி மண்டல செயலர் பன்னீர்செல்வம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வட்ட செயலர் கணேசன், பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் வட்ட துணை தலைவர் ஆல்பர்ட், மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ராஜகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். கோட்ட இணைச் செயலர் குமாரசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com