மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள மஞ்சள் மற்றும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
இப்பயிற்சியில் மஞ்சள் கிழங்கு நேர்த்தி செய்தல், குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி செய்தல், மரவள்ளி குச்சி நேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், வெண்புழு கட்டுப்பாடு, மாவுப்பூச்சி கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, அறுவடை மற்றும் பின்செய் நேர்த்தி ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 97904 91566 எனும் எண்ணில் தோட்டக்கலை தொழில்நுட்ப  வல்லுநரை அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொண்டு  பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com