சுடச்சுட

  

  குடிநீர் திட்டப் பணிகள்: மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் ஆய்வு

  By DIN  |   Published on : 26th June 2019 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலரும், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷராம். 
  இந்த ஆய்வில், பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, நகராட்சி சார்பில் சுந்தர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அனில் மேஷராம், நகர் பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.  
  தொடர்ந்து, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அன்னமங்கலம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த கண்காணிப்பு அலுவலர், விசுவக்குடி பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 18.71 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் கிணறு அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில் இப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
  பின்னர், அரும்பாவூர் பேரூராட்சியில் பொது கிணற்றில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்குவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார் அனில் மேஷராம்.   
  ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்ட உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai